JESUS CHRIST is the ONLY WORD


கிறிஸ்தவ நாடுகளும் - தமிழரும் - இஸ்ரேலும்...!

கிறிஸ்தவர்கள் எப்போதும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும்," என்று சில கிறிஸ்தவர்கள் தமது அரசியல் கருத்தை திணிக்கிறார்கள். "இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே - ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்? ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு சக்தியாக அமையமுடியும்? ஈழத் தமிழர்களின் நேச சக்திகள் என்று யார் எமக்கு இருக்கின்றார்கள்?” என்ற கேள்வியும் இன்று தமிழரிடையே கேட்கப்பட்டு வருகின்றது. 

இயேசு கிறிஸ்து ஒரு வெள்ளையின ஐரோப்பிய சமூகத்தில் பிறக்கவுமில்லை, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டிருக்கவுமில்லை. நமது நாடுகளில் கிறிஸ்தவர்கள் என்றால் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுவார்கள் என்றல்லவா கருதுகின்றார்கள்?


தூரத்தில் இஸ்ரேல் தெரிகிறதா? அது தான் எமது இலட்சியம். நாமும் யூதர்களை பின்பற்றி, அமெரிக்கா உதவியுடன் தமிழ் இஸ்ரேல் அமைப்போம். அதற்கு முதல் படி, எம்மை கிறிஸ்தவர்களாக இனங்காட்டுவோம். அப்போது தான் கிறிஸ்தவ நாடுகள் எமது துயர் துடைக்க ஓடோடி வருவார்கள். என சிலர் நம்பி வருகின்றார்கள். அது உண்மையா? 


அப்படியா? கிறிஸ்தவர்களுக்கு இன்னல் ஏற்பட்டால், கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்களா? இவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. அதிக தூரம் போகத் தேவையில்லை. அயல் நாடான இந்தியாவில், நாகலாந்து என்ற தனி நாடு கோரிப் போராடும் நாகா மக்கள் கிறிஸ்தவர்கள் தான். இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற ஆயுதமேந்திப் போராடும் நாகா இயக்கங்கள் யாவும், "சுதந்திர நாகலாந்து ஒரு கிறிஸ்தவ நாடாக அமையும்," என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர். சில மேலைநாட்டு கிறிஸ்தவ நிறுவனங்கள் இரகசியமாக நாகா போராட்டத்திற்கு உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகின்றது. இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே நாகா பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. இதெல்லாம் மேற்குலகில் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான். இருப்பினும் எந்தவொரு கிறிஸ்தவ நாடாவது, நாகலாந்து விடுதலைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளதா? ஈழத்தமிழர் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என்று கூறுவதைப் போல, நாகா மக்கள் மன்மோகன் சிங் போர்க்குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அண்மையில் (கிறிஸ்தவ)அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மன்மோகன்சிங்கை சந்தித்து, இரு நாடுகளினதும் உறவைப் புதுப்பித்து விட்டு சென்றார். எந்தவொரு கிறிஸ்தவனும் நாகா மக்கள் சார்பில் எதிர்ப்புக் காட்டவில்லை. 


இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்களுக்கு சீனாவை பிடிக்காது. அதே நேரம், அமெரிக்காவை அளவுக்கு அதிகமாகவே பிடிக்கும். "இலங்கை அரசு சீனாவுடன் நெருக்கமாகி வருவதால், அமெரிக்கா தமிழர்களை ஆதரிக்கும். கொஞ்ச நாட்களில் ஈழமும் வாங்கித் தரும்." என்று பல தமிழ் ஊடகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. கடந்த சில வருடங்களாகத் தான், சிறிலங்கா-சீனா உறவுகள் நெருக்கமடைந்ததாக, இந்த ஊடகங்கள் சொல்வதைக் கேட்கும் ஒரு சாதாரண தமிழன் நினைக்கிறான். 


பர்மா (மியான்மர்) பல தசாப்தங்களாக சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றது. சீனா முதன்மையான வர்த்தகக் கூட்டாளி மட்டுமல்ல, நீண்ட காலமாக பர்மிய இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்து வருகின்றது. பர்மாவில் இராணுவ சர்வாதிகாரம் நிலவுவதும், அவர்களின் அடக்குமுறை ஆட்சியும் மேற்குலகில் நன்கு தெரிந்த விடயங்கள். இராணுவமும், பெரும்பான்மை பர்மிய மொழி பேசும் மக்களும், அரசு மதமான பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள். 


தாய்லாந்து எல்லையோரம் காரேன் என்ற இன மக்கள் வாழும் பிரதேசம் உண்டு. காரேன் மொழி பேசும் மக்களில் கிறிஸ்தவர்கள் கணிசமான தொகையினர். அவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாக தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்துகின்றனர். காரேன் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக, பர்மிய இராணுவம் கிறிஸ்தவ ஆலயங்களையும் இலக்கு வைத்து தாக்கியது. "காரேன் மொழி பேசும் மக்களின் தனி நாட்டுக் கோரிக்கை மட்டுமல்ல, கிறிஸ்தவ மதமும் பர்மிய பிரிவினையை தூண்டும் தீய சக்திகள்," என்று பர்மிய அரசு பகிரங்கமாகவே அறிவித்தது. காரேன் மக்களுக்கு ஆதரவாக எந்த கிறிஸ்தவ நாடு குரல் எழுப்பியது? காரேன் நாட்டை பிரித்துக் கொடுத்தால், இலகுவாக சீன எல்லையில் கால் பதிக்கலாம் என்று அமெரிக்காவுக்கு தெரியாதா? போர்க்குற்றம் புரிந்ததாக, பர்மிய ஆட்சியாளர்களுக்கு எதிராக எத்தனை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன? சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் எல்லாம் ஒவ்வொரு வருடமும் இது பற்றி முறைப்பாடு செய்கின்றன. 


இந்தோனேசியாவில் மலுக்கு தீவுக் கூட்டங்களில், மலுக்கு மொழி பேசும் இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பான்மை இந்தோனேசியரிடம் இருந்து வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுபடுகின்றனர். மலுக்கு மக்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவர்கள். ஆரம்பத்தில் மலுக்கு மக்கள் தமக்கென தனிநாடு கோரிப் போராடினார்கள். இந்தோனேசிய அரசு அவர்களின் போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டது. அதன் பிறகு, இந்தோனேசிய அரசு அங்கே வேண்டுமென்றே மதப் பிரச்சினையை தூண்டி விட்டது. வெளிப்பார்வைக்கு மதக்கலவரமாகவே தெரிந்தது. அரச ஆதரவைப் பெற்ற முஸ்லிம் காடையர்கள் கூட்டம் கிறிஸ்தவர்களை படுகொலை செய்தது, அவர்களின் ஆலயங்களை எரித்தது. ( பதிலுக்கு கிறிஸ்தவ காடையர் கூட்டம் முஸ்லிம் மக்களை கொன்று, மசூதிகளை எரித்தது.) இந்த செய்திகள் யாவும் மேற்குலகில் பரபரப்பாக பேசப்பட்டவை தான். நான் அறிந்த வரையில், இதுவரை எந்தவொரு கிறிஸ்தவ நாடும் (முன்னாள் காலனியாதிக்கவாத நெதர்லாந்து உட்பட) மலுக்கு கிறிஸ்தவர்களுக்கு உதவ முன் வரவில்லை. மாறாக, உலகிலேயே அதிகளவு முஸ்லிம்களை கொண்ட இந்தோனேசியாவுக்கு ஆதரவாக உறவுகளைப் பேணி வருகின்றனர். அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்ற சர்வாதிகாரி சுகார்ட்டோ, முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்புகளை வளர்த்த கதையை எழுதப் போனால், இந்தக் கட்டுரை நீண்டு விடும். 


"வேற்று மதத்தவர்களான யூதர்களின் இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு வலையம் போட்டு வைத்திருக்கிறார்கள்." இஸ்ரேலிய ஆதரவாளர்கள் ஒரு பெரிய உண்மையை கண்டுபிடித்துக் கூறுகிறார்கள். கிறிஸ்தவர்களான நாகா, காரேன், மலுக்கு மக்களைப் பாதுகாக்கும் வலையம் எங்கே? நான் இங்கே குறிப்பிட்ட தகவல்களை எல்லாம் எத்தனை தமிழர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? எத்தனை கிறிஸ்தவ சகோதரர்கள் நாகா, காரேன், மலுக்கு கிறிஸ்தவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்? இஸ்ரேலின் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களில் எத்தனை பேர், நாகலாந்து விடுதலையை ஆதரிக்கிறார்கள்? "யாராலும் வெல்ல முடியாத புத்திசாலி யூதர்கள்" பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்களுக்கு, உலகின் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்கள் கண்ணில் படாதது ஏன்? ஒரு வேளை, "புத்திசாலிகளுக்கு" மட்டும் தான் நாட்டை ஆள உரிமை உண்டு என்று கருதுகிறார்கள் போலும். "யூதர்களுக்கு உரிமையுடைய" இஸ்ரேலைப் பற்றி விலாவாரியாக எழுதும் ஊடகங்கள், ஏன் "கிறிஸ்தவ விடுதலைப் போராட்டங்கள்" குறித்து எழுதுவதில்லை? 


யூதர்கள் 2000 வருடங்களுக்கு முன்னர் நாடிழந்து அகதியாக அலைந்த கதை எல்லாம் விபரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். பர்மாவில் நாகா அகதிகள், தாய்லாந்தில் காரேன் அகதிகள், நெதர்லாந்தில் மலுக்கு அகதிகள், இவர்களும் நாடிழந்து அகதிகளாக அலைகிறார்கள். இது நிகழ்கால யதார்த்தம். நமது காலத்து "கிறிஸ்தவ அகதிகள்" குறித்து, இஸ்ரேல் விசுவாசிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. 


2000 வருடங்களுக்கு முன்னர் அகதியான யூத மக்களுக்கு ஆதரவாக உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் அகதிகளான மக்களைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரேயொரு வார்த்தை கூட பேசுவதில்லை. இஸ்ரேலிய விசுவாசிகள் ஈழத்தமிழர் சார்பில் பேசும் போது, அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகின்றது. இஸ்ரேல் என்ற தேசம் உருவான காலங்களில் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்களில் கிறிஸ்தவர்களும் இருந்தனர். 


பிற்காலத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலேம், கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளில் பெருமளவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். இஸ்ரேலிய விமானங்கள் குண்டு போட்ட சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ ஆலயங்களும் சேதமடைந்தன. அப்போதெல்லாம் கிறிஸ்தவ ஒற்றுமை எங்கே போனது? "கிறிஸ்தவ பிணங்களின் மீது ஏறி நின்று கொண்டு, இஸ்ரேலுடன் கை குலுக்குவது," பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யும் மதத் துரோகம் ஆகாதா? கணிசமான தொகை கிறிஸ்தவர்களைக் கொண்ட பாலஸ்தீன, சிரியா, லெபனான் நாடுகளுக்கு ஆதரவாக அல்லவா, கிறிஸ்தவ பாதுகாப்பு வலையம் போடப்பட்டிருக்க வேண்டும்? வேற்று மதத்தவர்களான யூதர்களுக்கு ஆதரவாக, கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு வலையம் போட்டன என்றால், நம்பக் கூடியதாகவா இருக்கிறது? 


கிறிஸ்தவ மதத்தவர்களின் புனித ஸ்தலங்கள் இஸ்ரேலில் மட்டுமல்ல, லெபனான், சிரியா, ஜோர்டான், போன்ற அயல்நாடுகளிலும் காணப்படுகின்றன. (வருடந்தோறும் கிறிஸ்தவ யாத்திரீகர்கள் அந்த இடங்களுக்கு சென்று வருகின்றனர்.) இது உலகில் உள்ள அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்த விடயம். ஆனால் "இஸ்ரேலை சுற்றி பாதுகாப்பு வலையம்" போட்ட, "கிறிஸ்தவ" நாடுகளுக்கு மட்டும் இந்த உண்மை தெரியவில்லை. இஸ்ரேல் ஆதரவாளர்களிடம் இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. (அவர்களே இப்போது தான் முதன் முறையாக இதை எல்லாம் கேள்விப்படுகிறார்கள்.) உலகத்தில் எல்லாவற்றையும் இனமாக, மதமாக பிரித்துப் பார்ப்பவர்களுக்கு அதற்கு மேல் சிந்திக்கத் தெரியாது. இவர்கள் "கிறிஸ்தவ நாடுகள்" என்று குறிப்பிடுவன யாவும் மேலைத்தேய ஏகாதிபத்திய நாடுகள். அவை தமது பொருளாதார நலன் குறித்து மட்டுமே சிந்திக்கின்றன. அவர்களுக்கு மதம் ஒரு விஷயமே அல்ல. 


கீழைத்தேய மக்கள் தான் அப்படி நம்பி ஏமாந்து போகின்றார்கள். மேலைத்தேய "கிறிஸ்தவ" நாடுகள், கிறிஸ்தவ செர்பியாவுக்கு எதிராக முஸ்லிம் கொசோவோவை ஆதரிக்கவில்லையா? அதனை எப்படி நாம் புரிந்து கொள்வது? நேட்டோ படைகள் செர்பியா என்ற கிறிஸ்தவ நாட்டின் மீது குண்டு போட்ட போது, உலகக் கிறிஸ்தவர்கள் நேட்டோ நாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டாமா? அப்போதெல்லாம் இந்த "கிறிஸ்தவ-தமிழ்-சியோனிஸ்டுகள்" இஸ்லாமிய கொசோவோவை தானே ஆதரித்தார்கள்? அதனை மறுக்க முடியுமா? கொசோவோ விடுதலையடைந்த போது குதூகலித்தார்கள். அப்போது என்ன நடந்தது? கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன, கிறிஸ்தவ செர்பியர்கள் கொசோவோவில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள். இஸ்ரேலைக் காட்டி கிறிஸ்தவ ஆதரவு திரட்டும் பேர்வழிகளுக்கு அந்தக் கதைகள் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிப்பு செய்கிறார்களா?


அது சரி, "உலகக் கிறிஸ்தவர்களின் மீட்பரான" அமெரிக்கா, கிறிஸ்தவர்களுக்கு செய்த நன்மை என்ன? ஈராக்கில் குறைந்தது பத்து சத வீதமாகிலும் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். சதாம் ஹுசைன் காலத்தில் எட்டு லட்சம் கிறிஸ்தவர்கள் சமாதானமாக, பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். தாரிக் அசிஸ் என்ற கிறிஸ்தவர் வெளிவிவகார அமைச்சராக உயர்பதவி வகித்தார். (கிறிஸ்தவ) அமெரிக்க படையெடுப்புக்கு பின்னர், கிறிஸ்தவ ஈராக்கியரின் வாழ்வு மேம்பட்டிருக்கும் என்று ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே எதிர்பார்த்திருப்பான். (கிறிஸ்தவ) அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருக்கும் போதே, ஆயுதபாணிகள் கிறிஸ்தவர்களை தாக்குவதை தடுக்க முடியவில்லை. 


சதாம் ஆட்சியில் ஒரு கிறிஸ்தவர் கூட கொல்லப்படவில்லை, ஒரு கிறிஸ்தவ ஆலயம் கூட சேதமாக்கப்படவில்லை. "அமெரிக்கா பாதுகாப்புக் கொடுத்த" ஈராக்கில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், தேவாலயங்கள் சேதப் படுத்தப் பட்டன. எல்லாம் வல்ல, உலகில் அதிக சக்தி வாய்ந்த, அமெரிக்க இராணுவம் நினைத்திருந்தால் கிறிஸ்தவ ஈராக்கியருக்கு தனி அரசு வேண்டாம், ஒரு தனி மாநிலமாவது அமைத்துக் கொடுத்திருக்க முடியாதா? அது கூட வேண்டாம். கிறிஸ்தவ அமெரிக்க படையினர், ஈராக்கிய கிறிஸ்தவர்களை பாதுகாத்திருக்க கூடாதா? இன்று அங்கேயுள்ள நிலைமை என்ன? கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஐம்பது வீதமான கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் அகதிகளாக அலைகிறார்கள். ஈழத்தமிழருக்கும் அந்த நிலைமை வர வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களா? ஈழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் வெளியேற்ற சூழ்ச்சி நடக்கிறதா?

பாருங்கள்.

உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப் பாருங்கள். அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன். (ஏசாயா 51:2) இன்று உங்களையும் அவர் ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராக இருக்கின்றார். தினமும் ஒரு நற்செய்தி

சீகன் பால்க்

பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்ததெய்வ மனிதர் சீகன்பால்க்!!!

இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு.

தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய பாராத்தால், எப்படி யாவது இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தன் அரண்மனை பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு தேசத்தில் ஒருவரும் முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய ஜெர்மனியின் பக்கம் திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு முன் வந்தார்கள்.

சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம் இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார். வீரமும், விடாமுயற்ச்சியும் நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின் சரித்திரம். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது. சீகன் பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை.

இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு இருவருமே மிசனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது. அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார். இறு தியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள். அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் இருவரும், இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள்.

அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு தடைகள் சொந்த நிலத்தில் மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது.

ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியானது தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க் கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடைய+று செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன் பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு வந்து சோர்ந்தபோது, கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக அந்தக் கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த கப்பலின் தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான். ஆனால் அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன் னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள். 1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.

அந்த இரு இந்திய மிஷனெரிகளின் உபத்திரவம் உச்சக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் தரங்கம்பாடிக்கு வெளியிலேயே காலை 10 மணியிலி ருந்து மாலை 4மணி வih காத்திருந்தார்கள். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த இடத்தின் அதிகாரியாகிய ( commander ) J.C. ஹேசியஸ் என்பவன் அவர்களை வந்து சந்தித்தான். உடனே அவன் யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று சீரிய போது, சீகன் பால்க் தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் அந்த அதிகாரியின் ஆத்திரமும், கோபமும் குறைந்தன. இறுதியில் அந்த இரு மிஷனெரிகளும் அந்த அதிகாரிக்குப் பின்னால் போக அனுமதியளிக்கப்பட்டது.

அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி மார்க்கெட்போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு சட்டென்று மறை ந்து விட்டான். மொழி தெரியாத ஒரு அந்நிய தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல, எங்குபோவதென்று தெரியாமல் தெருவிலே நின்றார்கள். ஆயினும் இருள் நிறைந்த இந்தியாவில் தேவ வார்த்தையின் தீப ஒளியேற்றும் தரி சனத்தை தந்த தேவன் அவர்களோடிருந்தார். அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில் தங்குவதற்கு இடமளித்தார்.

தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள் சீகன் பால்க்கையும் அவரது தோழர் ப்ளுட்சுசாவையும் நடத்திய முறையானது அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி (commander)அவர்களை இலச்சைய+ட்டும ; பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை பகிரங்கமாக கைது செய்தான். அவர்களை அடித்து "நாய்களே" என்றும் அழைத்தான். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். இறுதியில் சீகன் பால்க் நான்கு மாதங்களாய் சிறையிலடைக்கப்பட்டார். எவரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போனாவும் மையுங் கூட மறுக்கப்பட்டது. நாட்டுத் துரோகிகளெனக் கருதப்பட்ட இம் மிஷனெரிகளுடன் யாரும் தொடர்பு கொள்ளல் ஆகாது என இராணுவத்தினரும் பிற அலுவலர்களும் ஆணை பெற்றிருந்தனர். இவ்வித பாதகமான சூழ்நிலையில் எவரும் மிஷனெரி களத்தினின்று பணியைக் கைவிட்டு விட்டு ஓடியிருப்பர். ஆனால் சீகன் பால்க்கோ அப்படிப்பட்ட மனிதரல்ல. திடமனமும், மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. அதற்கு மாறாக, தன்னைக் கொடுமைக்குள்ளாக்கிய அந்த அதிகாரிக்கும், மற்றவர்களுக்கும் சீகன் பால்க் கிறிஸ்துவின் உன்னத அன்பை வெளிப்படுத்தி தேவன் அளித்த மாவலிய போர்க் கருவியான அந்த "அன்பு" என்னும் ஆயுதத்தால் அவர்களனைவரையும் கீழ்ப்படித்தினார்.

ஆரம்ப காலத்தில் இவ்விதக் கொடூரமான பாடுகளைச் சகித்தனு பவித்த இவ்விரு வாலிப மிஷனெரி களும் தங்கள் மிஷனெரிப் பணியைத் தொடங்கினர். அவர்களது சொந்த மொழி ஜெர்மன்(German)ஆகும். தொழிற்சாலையின் அலுவல் மொழி யான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே. டேனிய அலுவ ர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர் அறிமுகமில்லாத மொழியாக இருந்தது. சுதேசத் தமிழர் எவருக்கும் டேனிய மொழி தெரியாது. அவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்க உதவி புரியும்படி தகுதி வாய்ந்த மொழியாசிரியர் ஒருவருமில்லை. எனவே, முன்னோடிப் பணிக்கும் தீரத்துக்கும் மனோதிடத்துக்கும் அடையா ளமாய் விளங்கும் சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளதை; தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார்.

ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகட்கு முன்னர் தரை மணல் மீது தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்த போது உண்மையில் அவர் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றின் முன்னுரையை எழுதினார் என்றே சொல்ல வேண்டும். மணல் மீது வரைந்த அவரது குழந்தைத் தனமான எழுத்துககளை வெகு விரைவில் தரங்கம்பாடிக் கடலலைகள் அழித்துச் சென்ற போதிலும் அவரது உறுதியான முயற்சிகளெல்லாம் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றில் அழியாததொரு முத்திரையைப் பதித்துவிட்டது என்பதனை அச்சமயத்தில் அவர் உணராதிருந்தார். அதற்கு பிறகு 87 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரி "தற்கால மிஷனெரி தூது பணியின் தந்தை" எனப்படுவாரானால், சீகன் பால்க்கைத் "தற்கால மிஷனெரி தூதுப் பணியின் முற்பிதா அல்லது முன்னோடி அல்லது வழி வகுத்தவர்" என அழைப்பது சாலப் பொருத்தமாகும்.

தன்னுடைய சொந்தத் திறமையினாலும், விடாமுயற்சியினாலும் சீகன் பால்க் வெகு சீக்கிரமாக தமிழ் மொழி யைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இரவு பகலாக தமிழ் மொழி யில் உள்ள இலக்கியங்களைப் படித்தார். வேதாகமத்திற்கு முன்னோடியாக, ஒரு சில கைப்பிரதிகளையும், பள்ளி பாட புத்தகங்களையும், பிரசங்கங்களையும் வெளியிட்டார். இந்தப் புத்தகங்களை முதலில் கையினாலும் பின்பு 1713 ம் ஆண்டு ஜெர்மனிய தேசத்து நண்பர்கள் பரிசாக அனுப்பிய அச்சு இயந்திரத்திலும் அச்சிடப்பட்டது.

தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தன்னுடைய ப+லோக பயணத்தை முடித்தார்.

அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். " தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது.

அவருடைய மரண நாளான 1719 பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார். ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். "தேவன் தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என் சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி வித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை விட்டார்"


பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்களா?
பொதுவாகவே மதம் சார்ந்த விவாதங்கள்,அனைத்து மதங்களின் மத குருமார்கள் செய்யும் தவறுகள் சார்ந்த விவாதங்களில் பங்கு பெறுவதில்லை.அதில் எவ்வித விருப்பமும் இல்லை.

ஆனால் கடந்த பல மாதங்களாக மோடி மீதும்,பாரதியஜனதா மீதும் வைக்கும் விமர்சனங்களில்,அது சார்ந்த விவாதங்களில் நம் கேள்விகளுக்கு நியாயமான பதிலை சொல்ல இயலாத பலர்,அடுத்த அஸ்திரமாய் நம்மீது கிறித்துவர்கள் எல்லாம் அந்நிய கைக்கூலிகள் என்றும்,பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி மதம் மாற்றுபவர்கள் என்றும்,அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்றும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து போய் விடுவதுண்டு!

பொதுவாகவே நேர்மையான வாதங்களில் பங்கு கொள்ள விரும்பாதவர்கள் அல்லது இயலாதவர்களின் அடுத்த அஸ்திரம் ஒன்று சாதியாகவோ, அல்லது மதமாகவோ தான் தொடர்ந்து இருந்து வருகிறது!

எதோ வெளிநாடுகளில் இருந்து அரசு சாரா உதவி நிறுவனங்கள் அனுப்பும் பணத்தால் தான், இங்கே கிறித்துவர்கள் வாழ்வது போலவும், அந்த பணத்தை எல்லாம் மதம் மாற்ற பயன்படுத்தப்படுவது போலவும்,அப்பாவி மக்களை மூளை சலவை செய்து ஏமாற்றித் தான் கிறித்துவ மதத்துக்கு மாற்றுகிறீர்கள் என்றும், சம்மந்தம் இல்லாமல்,தொடர்ந்து சிலர் நம்மை நோக்கி விமர்சனம் வைப்பதால்,ஒன்றிரண்டு விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்.

எனக்கு இந்த காசு கொடுத்து மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விடயத்தில் உடன்பாடு இல்லை.அப்படி யாராவது செய்தால் அது தவறு.வெறுமனே எண்ணிக்கையில் **பெயர்* கிறித்துவர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று வேதாகமம் எதையும் சொல்லவில்லை.அப்படியான கட்டாயம் எதுவும் இல்லை.நீங்கள் போய் உலகத்தில் உள்ள சகல மனுஷர்களுக்கும்,சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று தான் வேதாகமத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்,அப்படி ஏற்றுக் கொள்பவன் தான் உண்மையான கிறித்துவன் என்பது தான் கிறித்துவத்தின் அடிநாதம்.அப்படி சொந்த ரட்சகாராக ஏற்றுக் கொள்வதும் கூட,எவருடைய நிர்பந்தமும் இன்றி,முழு மனதோடு ஏற்றுக் கொண்டதாய் இருக்க வேண்டும். இது தான் கட்டளை!

அப்படியானால் பிறருடைய நிர்பந்தத்தின் பேரிலோ அல்லது பணம் கொடுத்து எங்களை மதம் மாற சொல்கிறார்கள் என்பதாலோ,ஒருவேளை சிலர் மதம் மாறுகிறார்கள் என்று வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, அப்படியான மனிதர்கள் எல்லோரும் கிறித்துவர்கள் ஆகி விட மாட்டார்கள்.காரணம் உள்ளத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கிறவர் தேவன் என்றே வேதாகமம் சொல்கிறது.

மற்ற மதங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவற்றின் மதிப்பீடுகள் குறித்தும் எதுவும் தெரியாது.ஆனால் நான் அறிந்த கிறித்துவத்தின் மதிப்பீடுகள் உயரமானவை என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்,உணர்கிறேன்.! காரணம்,ஒவ்வொரு மனிதனின் செயல்பாட்டையும் விட, அதை செய்யும் போது அவன் மன நிலை என்னவாக இருந்தது,அதாவது அதை மகிழ்வோடு செய்தார்களா இல்லாவிட்டால்,வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக செய்தார்களா என்பதைப் பொறுத்தே அதன் பலன் அல்லது உள்ளத்தின் உண்மையான, நிலைப்பாட்டை தான் தேவன் பார்க்கிறார் என்றே வேதாகமம் சொல்கிறது!

இதற்கு ஆதாரமாய் பல உதாரணங்களை சொல்லலாம். ஆயினும் ஒரு சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆலயத்தில் இருவர் காணிக்கை செலுத்துகிறார்கள். ஒருவர் வசதியானவர். இன்னொருவர் ஏழை விதவைப் பெண். பணக்காரர் காணிக்கை போடுகிறார். அவரைப் பொறுத்தவரையில் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார். ஏழை விதவையோ தன்னிடம் இருந்த சில்லறை காசுகள் அனைத்தையும் காணிக்கையாக போடுகிறார்.

தேவன் யாருடைய காணிக்கை பெரிது என்கிறார் என்றால்,ஏழை விதவையின் சில்லறை காசுகள் தான் பெரிது என்கிறார். அதற்கு காரணம் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் முழுமையாக தேவனுக்கு அர்பணிக்க வேண்டும் என்று எண்ணியே அவள் காணிக்கை செலுத்தினாள்.பணம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல.அதனால் அந்த காணிக்கை உயர்ந்தது என்று சொல்கிறார்.

சாதாரணமாக பார்த்தால் பணக்காரர் நூறு ரூபாய் போட்டு இருக்கிறார் என்று எண்ணிக் கொள்ளலாம்.ஏழைப் பெண் ஒரு ரூபாய் போட்டு இருக்கலாம். கணக்கின் படி பார்த்தால் பணக்காரர் தான் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார் என்றே நாம் சொல்ல இயலும். ஆனால் ஒரு செயலை அல்ல,அந்த செயலின் பல காரணிகளை,சூழல்களை, உள்ளத்தின் நினைவுகளை சீர் தூக்கி பார்த்து நியாயம் சொல்பவர் தேவன் என்று வேதாகமம் சொல்கிறது!

இப்படியாக பல மதிப்பீடுகளின் உயர்வை சொல்ல இயலும்.ஒரு தவறான பெண்ணோடு அல்லது ஒரு பெண்ணோடு வேசித்தனத்தில் ஈடுபட்டால் தான் அது விபச்சாரம் என்பதில்லை.
ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால், அதுவே விபச்சாரம் தான் என்கிறது வேதாகமம்.

ஆலயத்துக்கு போகிறோம், தேவனை தரிசிக்கிறோம் என்கிறோம். அப்படி உண்மையாக தேவனை தரிசிக்க விரும்பினால்,முதலில் சண்டை போட்டு இருக்கும் உன் சொந்த சகோதரனோடு போய் சமாதானம் ஆன பின்பு,என் ஆலயத்துக்கு வா, வந்து காணிக்கை செலுத்து அப்பொழுது நான் அதை ஏற்பேன். அது இல்லாமல் சும்மா நானும் ஆலயத்துக்கு போனேன், ஆண்டவரை தரிசித்தேன், காணிக்கை செலுத்தினேன் என்று சொல்வாய் என்றால் அதை தேவன் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார். சக மனிதர்களை, சொந்த சகோதரர்களை நேசிக்காத மனிதன் எப்படி கடவுளை நேசிப்பான் என்பதற்கான செய்தி அது!

பல நேரங்களில் நாம் உள்ளத்தில் என்ன எண்ணுகிறோம் என்பது வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் உள்ளத்தின் நினைவுகளை வைத்தே சரியா தவறா என்று பார்ப்பது தான் கிறித்துவத்தின் மதிப்பீடு.

ஆக வெறும் புற அடையாளங்களை வைத்து மனிதனை மதிப்பிடுபவர் அல்ல கிறிஸ்து. அப்படி இருக்கும் போது பணத்துக்காகவோ,அல்லது வேறு நிர்பந்தங்களுக்காகவோ மதம் மாறினால்,
அதை ஒரு போதும் கிறிஸ்து ஏற்கமாட்டார். அப்படி மாறுபவர்கள் கிறித்துவர்களும் அல்ல.
கிறித்துவம் என்பது வெறும் புற அடையாளங்களால் ஆனது அல்ல.அது வாழ்வியல்!

வெறும் பெயர் மட்டுமே கிறிஸ்துவம் என்பதன் அடையாளம் ஆகி விடாது.இன்னும் சொல்லப்போனால் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை முழு மனதோடு ஏற்றவர்கள் தான் கிறிஸ்துவர்கள்.

ஒன்றும் தெரியாத ஏழை அப்பாவி மக்களைத் தான் இப்படி கிறித்துவர்களாக மதம் மாற்றுகிறார்கள் அல்லது பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு ஒரு சிறு உதாரணம்.

எல்லோருக்கும் நடிகர் சாருஹாசனைத் தெரிந்திருக்கும். யார் இந்த சாருஹாசன்? நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த சகோதரன். சுஹாசினி அவர்களின் தந்தை.மணிரத்தினத்தின் மாமனார். இவரது சிறப்பு அம்சம் என்னென்ன என்று கேட்பீர்கள் என்றால், சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நீதிமன்றங்களில் முப்பது** ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர்.அப்படியானால் ஒரு தலைமுறைக்கு முன்பே கல்வி அறிவு கொண்ட மூத்த கல்வியாளர். பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தால் வேதங்கள் நான்கையும் முறையாக கற்றுத் தேறியவர் மட்டுமல்ல சில காலங்களுக்கு முன்புவரை அதை பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தவர்.

சமஸ்கிரித மொழியை முறையாக கற்றுத் தேறிய பண்டிதர் மட்டுமல்ல நீண்ட நெடிய காலமாக சமஸ்கிரித ஆசிரியராக இருந்து வகுப்புகள் நடத்துபவர். கோயில் வழிபாடுகளில் உள்ள அத்தனை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் உண்மையான அர்த்தம் தெரிந்தவர். திரைப் படங்களில் அவர் ஏற்கும் வேடங்களில் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கோவில் அர்ச்சகராக அல்லது வேதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக,சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக எதோ ஒரு வகையில் மதம் சார்ந்த பாத்திரமாகவே ஏற்று நடிப்பார்.அப்படியான பாத்திரங்களையே அவர் விரும்புவார் என்றும் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். சிறந்த நடிப்புக்காக மாநில மற்றும் தேசிய விருது வாங்கியவர்.

இந்து மத வழிபாட்டை,வேதங்களை எல்லாம் முறையாக பயிற்றுவிப்பவர் என்று மட்டுமல்லாது அதையே வாழ்வியலிலும் கடைபிடித்து வந்த மனிதர். கமலஹாசனைக் குறித்தும் அவரது வாழ்வைக் குறித்தும் குறிப்பாக அவரது திருமண சச்சரவுகள் குறித்தும் எப்போதும் கடுமையான விமர்சனங்கள் கொண்ட மனிதர்.அதாவது அவரைப் பொறுத்த வரையில் ஒழுக்கம் என்பதற்கு ஒரு வரையறையை வைத்திருந்த மனிதர்.இவர் அடிப்படையிலேயே நல்ல வசதியானவர் தான். பணத்துக்கான தேவை என்பது அதிகம் இவருக்கு கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு பூர்வீகத்தை கொண்ட மனிதர்,அதுவும் ஒரு பிராமண குடும்பதை சேர்ந்த தீவிரமாக மத கோட்பாடுகளை கடைபிடிப்பவர், கொஞ்ச காலத்துக்கு முன்பு கிறித்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவரை யாராவது ஏமாற்றி மதம் மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது அப்படி யாராவது வித விதமாய் பேசி ஏமாற்ற நினைத்தாலும்,
ஏமாறும் மனிதரா அவர்?

கடந்த ஆண்டு இவர் எப்படி கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொண்டார் என்ற சாட்சி ஒன்றை பார்க்க்க நேர்ந்தது.உண்மையில் மிகுந்த நெகிழ்வான சாட்சியாக அது இருந்தது.வேதாகமத்தை மிக ஆழமாக வாசித்து வந்திருக்கிறார்.கிறித்துவத்தை உடனே எல்லாம் அவர் ஏற்கவில்லை. அதை ஏற்பதற்கு முன் பல ஆண்டுகளாக வேதாகமத்தை வாசித்து வந்திருக்கிறார். அதில் தெளிவு கிடைக்காமல் அவர் கிறித்துவத்தை ஏற்கவில்லை என்கிறார்.

சாதாரணமாக கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களுக்கு கூட இந்த அளவுக்கு வேதாகமத்தை குறித்த வாசிப்பு அனுபவம் இருக்குமா என்பது சந்தேகமே! அந்த அளவுக்கு ஆழ்ந்து வாசித்து, வேதகாம வார்த்தைகளை ஞாபகத்தோடு பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு பேசுகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஒரு தொலைக்காட்சி நாடகம் போலவே கதை வசனம் எழுதி தயாரித்தும் இருக்கிறார். கோவில்கள் சொல்லப்படும் சமஸ்கிரித ஸ்லோகங்கள் பலவற்றுக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்ன, அவை எதைக் குறிக்கின்றன,பரிசுத்த வேதாகமத்துக்கும் இந்த ஸ்லோகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை எல்லாம் மிக தெளிவாக விளக்கி சொல்கிறார்.பலவேறு ஆச்சயர்யமான விடயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஒருவேளை அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தெரிந்த நண்பர்கள், அவர் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் சரிதானா ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவராக மாறிவிட்டால் பெயர்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. அப்படி பெயர்மாற்றினால் தான் கிறித்துவர் என்ற நிபந்தனையும் கிடையாது.

அவரது சாட்சி குறுந்தகடாகவும் வெளி வந்து இருக்கிறது. யூடியூபிலும் கூட காணக் கிடைக்கிறது.பார்க்க வாய்ப்புள்ளவர்கள் பார்த்துக் கொள்ளலாம். இவரைப் போன்ற பலர் இப்படியாக கிறித்துவை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.பெரும் பெரும் பணக்காரர்கள்,
எவ்வித பொருளாதார நெருக்கடிக்கோ, துன்பங்களுக்கோ ஆட்படாத மனிதர்கள் பலர் மாறி இருக்கிறார்கள். சாருஹாசன் ஒரு பிரபலமான மனிதர் என்பதால் உங்களிடம் சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது!இந்த வயதில் அவர் கிறித்துவராக மாற வேண்டிய அவசியம் என்ன? பணத்துக்காகவா?

பிரபலம் இல்லாத பலர் இருக்கிறார்கள். சினிமாவில் இன்னொருவரை உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பழைய ஏ.வி.எம் ராஜனை சொல்லலாம். அவரும் கூட பல திரைப் படங்களில் கோவில் அர்ச்சகராக, அல்லது கடவுள் பயம் போன்ற விடயங்களை சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர். காசு பணத்துக்கு பஞ்சம் இல்லாத மனிதர் தான்.

ஆக நான் சொல்லவரும் செய்தி என்னவென்றால் இங்கே எல்லோரும் பணம் கொடுத்து தான் மதம் மாற்றுகிறார்கள்/மாறுகிறார்கள் என்ற குற்றசாட்டை முழுமையாக ஏற்க இயலாது.
அப்படி செய்வதாக இருந்தால் சாருஹாசன் போன்ற பின்னியை கொண்ட மனிதர்கள் எல்லாம், ஏசுவை ஏற்றுக் கொண்டிருக்க்கவே முடியாது. ஒருவேளை அப்படி யாராவது பணம் கொடுத்து மதம் மாற்றுவார்கள் என்றால் அது தவறு. அப்படி பணத்துக்காக மாறுபவர்கள் உண்மையான கிறித்துவர்களாகவும் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்!

இத்தனை நாள் இந்துவாக இருந்த போது,இந்தியராக கருதப்பட்ட சாருஹாசன், கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட படியால்,இனி அவரும் அந்நிய நாட்டு கைக்கூலி,அமெரிக்க அடிமை என்றெல்லாம் புதுப்பட்டம் வாங்குவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

இங்கே யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், மதமும் கடவுளை இல்லை என்றோ வேண்டாம் என்று கூட சொல்லலாம். அதுவல்ல பிரச்சினையும்,விவாதமும்!

ஸ்லோகங்களும்,அதற்கான விளக்கங்களும் குறித்த சாருஹாசனின் காணொளி இணைப்பு ஒன்று கீழே!

காணொளி http://www.youtube.com/watch?v=iqBtFoO7sFE  நன்றி !

courtessy: ஆன்டனி வளன்

தலைநிமிர்ந்து நில்!

'உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.' (எபிரெயர் 11:38)

மாரடைப்பினால் கணவன் திடீரென இறந்துவிட, 'இப்படியொரு மரணம் எனது கணவனுக்கு வரவேண்டியது ஏன்?” என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டாள் ஒரு இளந்தாய். மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தவறல்ல; ஆனால், நாமே நீதி விசாரிக்கிறவர்களாக மாறிவிடுகிறோம், அது தவறு. இதிலிருந்து வெளிவர, எபிரெயருக்கு எழுதப்பட்ட இப் பகுதி நிச்சயம் உதவும்.

‘உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.’ அதாவது, 'அவர்களை ஏற்க இவ்வுலகிற்குத் தகுதியில்லாமல் போயிற்று” என்று திருவிவிலிய மொழிபெயர்ப்பு கூறுகிறது. இந்த இவர்கள் யார்? மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வில், புகழ் படைத்தவர்களாக, விருப்பங்களை விரும்பியபடி பூர்த்திசெய்து, இவ்வுலகில் பிரச்சனைகளின்றி ஜீவித்தவர்களா? இல்லை. எபிரெய ஆசிரியர், இந்த நிருபத்தை யூத கிறிஸ்தவர்களுக்காகவே எழுதினார் என்று அறியப்படுகி றது. இவர்கள், மற்ற யூதர்களாலும், ரோமர்களாலும் பல உபத்திரவங்களை அனுபவித்ததால், மனம் நொந்து பின்மாற்றத்திற்குள்ளாகும் ஆபத்தில் இருந்தனர். இவர்களுக்காகவே இந்த ஆசிரியர், கிறிஸ்துவுக்கு முன்னரும், வேதாகமத்தில் சேர்க்கப்படாத இடைப்பட்ட காலப்பகுதியிலும், மெய்த் தேவனில் கொண்ட விசுவாசத்தினிமித்தம் பாடு அனுபவித்தவர்களைக்குறித்து விளக்கமாக எழுதினார். இந்த விசுவாச வீரர்களுக்கு இந்த உலகம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. இவர்களை இந்த உலகமும் ஏற்கவில்லை. ஆனால், இவர்கள் கொண்டிருந்த விசுவாசம் அன்று இந்த உலகத்திற்குச் சவாலாக அமைந்திருந்தது. இவர்களோடு சேர்ந்து, முதலாம் நூற்றாண்டு யூத கிறிஸ்தவர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையும்படி விசேஷித்த நன்மையாக இயேசு கிறிஸ்து தரப்பட்டாரே என்று அன்றைய விசுவாசிகளை ஆசிரியர் தைரியப்படுத்துவதையே நாம் வாசிக்கிறோம்.

இந்த இயேசுதான் நம்மையும் இரட்சித்திருக்கிறார். அவரில் கொண்டி ருக்கும் விசுவாசத்தினிமித்தம் நாம் என்ன பாடு அனுபவித்திருக்கிறோம்? இப்படியிருக்க, நாளை மாறிப்போகின்ற இவ்வுலக கஷ்ட துன்பங்களிலே நாம் கலங்கித் தவித்து இந்த உலகத்தில் எப்படி வாழுவேன், உலகம் என்னை என்ன சொல்லும் என்றெல்லாம் தடுமாறுவது ஏன்? உண்மைதான், கணவனை இழப்பது என்பது இலேசான விடயம் அல்ல. ஆனால், தம்முடைய தாசர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோதும், அவர்கள் அருகில் நின்று தேற்றிய கர்த்தர், இன்று உங்களை விட்டுத் தூரப்போவாரா? என்ன வந்தாலும் எனக்கு இந்த உலகம் ஒன்றுமில்லை என்று சொல்லி, இயேசுவுக்காய் தலைநிமிர்ந்து வாழுவோமாக.


courtessy: www.facebook.com/World.Tamil.Christians
நம்மிடம் இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழப் பழகிக் கொள்வோம்! நன்றி நண்பரே - தினமும் ஒரு நற்செய்தி /  https://www.facebook.com/GoodNewsDailytamil 

விசுவாசமாயிருங்கள்

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர்  2:8-9)

விசுவாசத்தைக் குறித்து அப்போஸ்தலர்கள் தங்கள் நிருபங்களுக்கூடாக அநேக காரியங்களைப் போதித்துள்ளார்கள். ஒருபோதும் விசுவாசம் கொள் என்று அப்போஸ்தலர்கள் கூறவில்லை. காரணம் நாம் விசுவாசத்திற்குள்ளாகவே பிறந்திருக்கின்றோம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சிலர் நல்லது, இயேசு தமது சீஷர்களிடத்தில் பல தடவைகள் விசுவாசமாயிருங்கள்என்று கூறியுள்ளாரே என்பர். அந்த நேரத்திலே அவருடைய சீஷர்கள் மறுபடியும் பிறந்தவர்களாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டின் பிரமாணத்திற்கு அமையவே வாழ்ந்தார்கள். இரட்சிப்போ, அதற்கு அப்பால், கிருபையினாலும் விசுவாசத்தினாலும் வருகின்றது. அதனால்தான் இயேசு தமது சீஷர்களைப் பார்த்து விசுவாசமாயிருங்கள் என்று கூறி அதை நிறைவேற்ற செய்தார். எவ்வாறாயினும், கிறிஸ்துவுக்குள் விசுவாசமானது உங்கள் ஆவிக்குள் இப்போது ஊற்றப்பட்டுள்ளது.

2பேதுரு 1:1ல் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறதாவது, நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:கவனியுங்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவே இதை எழுதுகின்றார். “...அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு...இது கிறிஸ்துவுக்குள் சகல விசுவாசிகளையும் குறித்து பேசுகின்றது. நாம் அப்போஸ்தலருடன் கூடவே விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். அதை சுதந்தரித்துள்ளோம். அதை நாம் உருவாக்கவோ வடிவமைக்கவோ வேண்டியதில்லை. அது கிறிஸ்து இயேசுவின் சுவிசேஷமான வசனத்திற்கூடாகவே வருகின்றது.

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் சாPரத்திற்கு நிருபங்ளை எழுதும்போது இந்த சத்தியங்களையே கூறுகின்றார். ரோமர் 12:3 ல் நாம் வாசிக்கிறோம். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.வசனம் கூறுகின்றபடி, கிறிஸ்துவின்சாPரமாயிருக்கின்ற சகல பரிசுத்தவான்களுடனும் நாமும் மறுபடி பிறந்தவர்களாக இருக்கின்றோம்! சுவிசேஷத்திற்கூடாக நாமும் அதேயளவு விசுவாசத்தைப் பெற்றுள்ளோம். 

இப்போது, கர்த்தராகிய இயேசு, விசுவாசத்தின் அளவைக் குறித்த ஒரு முக்கிய கூற்றினை கூறுகின்றார். அதனை நீங்களும் நிறைவேற்றலாம். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (மத்தேயு 17:20). இது ஆச்சரியமானது. உயிர்ப்பூட்டுகின்றது. அதாவது நீங்கள் முடிவற்ற வாய்ப்புக்களைக் கொண்ட வாழ்க்கையை வாழமுடியும். வெற்றியுள்ளதும் ஜெயமுள்ளதுமான உங்களுடைய வாழ்வை உருவாக்குங்கள். உங்கள் உலகத்தை விசுவாசத்தினால் ஆளுகை செய்யுங்கள். கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் ஜெயிப்பீர்கள். இது வியப்புக்குரியது! அவரது விசுவாசத்தினால் பெலனடைவதும் விருத்தியடைவதும் அனைவருக்குமான கடமையாகும்.

மரணம் ஒரு பாலம்.


- வஷ்னீ ஏனர்ஸ்ட்

மரணம் ஒரு பாலம். 

மானிட உலக வாழ்வினை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வே மரணமாகும். அதாவது சரீர வாழ்க்கை முடிவடைதலை நாம் மரணம் என்கிறோம். மனிதனின் புலன்கள், மூளை, இருதயம் போன்றவை செயலிழந்த நிலையில் சரீரப்பிரகாரமான மரணம் ஏற்படுகின்றது. “இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்” (பிரசங்கி 7:2). இந்த “மரணம் என்ற இறுதியான முடிவுக்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்களா?” என்பதைக் குறித்த ஒரு எச்சரிப்பையே நாம் இச்செய்தியில் காணப்போகின்றோம்.

மரணம் என்பது – பாவத்தின் விளைவு (ரோ. 5:12) – மனிதர் அனைவருக்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றது (எபி.9:27). அதாவது ஒவ்வொரு நபரும் மரிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – தேகத்தைவிட்டுப் பிரிவது (பிலி. 1:23).


மரணத்திற்கு ஆயத்தமாகுதல்

இயேசுவானவர் இவ்வாறு மரணத்திற்கு முகங்கொடுத்தார், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்…” (லூக். 23:46). இதுவே மரிப்பதற்கான சிறந்ததும் அழகானதுமான வழிமுறையாகும். இங்கே பிதாவின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தவாறு இயேசு தாமே மரிப்பதற்கு ஆயத்தமானார். நாமும் இவ்வாறாக நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கைகளில் ஒப்புவித்தவர்களாக மரிப்பதற்கு ஒருநாள் ஆயத்தமாக வேண்டியவர்களாக இருக்கின்றோம். நித்திய ஜீவனைத் தரத்தக்க தேவ வார்த்தைகளை இருதயத்திற்குள் வைத்து வைத்திருப்போமாயின், நாம் மரணத்தைக் குறித்து அஞ்சவேண்டிய அவசியமேற்படாது.

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கடந்துசெல்லும் ஒரு வாசலாக, ஒரு பாலமாகவே மரணம் காணப்படுகின்றது. இது இறுதியானதும் முடிவானதுமான நிலையல்ல. அதற்கு அப்பால் ஒரு நித்தியமான வாழ்க்கை ஒன்று உண்டு. தேவசாயலைப் பெற்றவர்களாக நாம் சிருஷ்டிக்கப் பட்டுள்ளமையினால், பாவத்தின் தண்டனையாகிய சரீர மரணத்திலிருந்தும் நரக தண்டனையிலிருந்தும் தப்பி, பிழைத்து நித்திய ஜீவனை அடைவோம் என்றே வேதாகமம் தேவனுடைய பிள்ளைகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.


மறுபிறவி வேதாகம ரீதியானதல்ல

மனிதராகிய நாம், ஒரேதரம் பிறப்பது எப்படியோ அப்படியே நாம் ஒரேதரம் மரிப்பதும் நியமிக்கப்பட்டிருக்கின்ற ஒன்று (எபி.9:27). ஆகவே மறுபிறவி எடுத்தல் என்பது வேதாகம ரீதியானது அல்ல. ஒருவன் மறுபடியும் மறு பிறவி எடுக்க இயலாது. ஒருவரின் ஆத்துமா இன்னொரு நபரின் சரீரத்திற்குள் செல்லவும் முடியாது. காரணம் சிருஷ்டிகரான தேவன் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் வாழத்தக்க ஒரேயொரு சரீரத்தையே கொடுத்துள்ளார். மரணத்தின் பின்னர் அந்த ஆத்துமா நித்தியமாக வாழும். அது உயிர்த்தெழுந்த மகிமையான சரீரமாகக் காணப்படும். இவ்வாறு நித்திய நித்தியமாக வாழும் ஆத்துமாவானது, ஒன்றில் தேவ சமுகத்திற்குள் செல்லும், அல்லது சாத்தானுடன் வேதனையான நரகத்திற்குள் கடந்துசெல்லும். நமது உடலோவென்றால் ஒருநாள் மண்ணோடு மண்ணாகும். அதாவது சாம்பலோடு சாம்பலாகும்.


கர்த்தருடைய பார்வையில் மரணம்

கர்த்தருடைய பிள்ளைகளின் மரணம் மகிமையுள்ளதாக காணப்படும். உண்மையில், கிறிஸ்தவர்கள் மரிக்கும்போது தேவ பிரசன்னத்திற்குள்ளேயே செல்கின்றார்கள். “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” (2கொரி.5:8). இந்தச் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்துசென்ற அந்த நிமிடம் முதல் ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு இருக்கிறார். அவர்கள் அழிவில்லாமையைப் பெற்றிருப்பார்கள் (1கொரி.15:42-44). மரணம் ஒரு தற்காலிக நித்திரைக்கு ஒப்பானது. உயிர் பிரிந்துசென்ற உடனே, ஒரு சரீரத்தை நாம் பார்க்கும்போது, அந்த சரீரத்தில் வாழ்ந்துவந்த அந்த நபர், இப்போது கிறிஸ்து இயேசுவுடன்கூட இருப்பதினாலே மகிழ்ச்சியுடையவராகக் காணப்படுவார். “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார்” (1தெசலோ.4:13-14). ஆம், இதன் காரணமாகத்தான், “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15). அது விலையேறப்பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.


மரண இருளின் பள்ளத்தாக்கிலே கூடவரும் கர்த்தர்

நான் ஒரு விசுவாசியாக இருப்பதினால், ஒருநாள் நானும் மரிக்கவேண்டும் என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். உண்மையில், மரணமடைகின்ற ஒரு விசுவாசிக்கு நித்திய மரணமாகிய நரகம் கிடையாது. “.. சாவு எனக்கு ஆதாயம்” (பிலி. 1:21) என பவுல் உறுதிப்பட கூறியதுபோல நாமும் கூறுவோம். காரணம் சாவு நம்மை ஒன்றும் பண்ணமுடியாது. கிறிஸ்துவோடு நித்தியமாக வாழத்தக்க ஆதாயத்தையே சாவு ஒரு விசுவாசிக்கு கொடுக்கமுடியும். ஆம், கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு, “…மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது…” (1கொரி. 15:54)

நாம் மரிக்கும் நிலையில் இருக்கும்போது கூட கர்த்தர் அங்கே நம்கூடவே இருக்கின்றார். “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்” (ஏசா.25:8). “…அது அதிக நன்மையாயிருக்கும்” (பிலி.1:23). மரணத்தைக் கடந்த நிலையில் நாம் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் காணப்படுவோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமானது உயிர்த்தெழுந்த பின்பு மகிமைக்குரியதாக மாறியதுபோலவே நம்முடைய சரீரத்தையும் மாற்றுவார்.

“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் …நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப். 3:20,21).

நாம் மரித்தபின்பு தேவனுடைய சமுகத்தில் அவரை சேவிக்கின்றவர்களாகக் காணப்படுவோம். “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4).

மரணம் என்ற காரிருளானது உங்களை மேற்கொள்ளவரும்போது, கர்த்தர் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார் என்ற நிச்சயமுள்ளவராக இருங்கள். “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்.23: 4,6) என தாவீதைப்போல கூறுங்கள்.

மரணவேளையிலே, கர்த்தருடைய வார்த்தையிலே உறுதியுள்ளவர்களாக இருப்பதற்கு இன்றே, தேவனுடைய கரத்தை இறுகப் பற்றிப் பிடித்தவர்களாக நடக்க ஆரம்பிப்போமாக. கர்த்தர் தாமே நித்திய ஜீவனைத் தந்து, நம்மை தம்மோடுகூட மறுமையிலே சேர்த்துக் கொள்வாராக!

நன்றி : http://sathiyavasanam.in/?page_id=6699


விடுதலையாக்கப்பட்ட அடிமை


இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகள் ஆனதினால் பரிசுத்தமாக்குதல் உங்களுக்கு கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன். ( ரோமர் 6 : 22 )

மிகவும் கொடிதான பாடுகள் மத்தியிலே தவித்துக்கொண்டிருந்த சில அடிமைகள், விற்ப்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டார்கள். ஒவ்வொரு அடிமையின் உடலிலும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட காயங்களும் அவர்கள் உள்ளுணர்விலும் நிச்சயமாக இருந்திருக்கும்.

கண்களிலே ஒரு வித ஏக்கம் யார் எம்மை வாங்கப்போகிறார்களோ? அவர்களின் ஆதிக்கம் எப்படிப்பட்டதாய் இருக்குமோ? என்றதோரு அங்கலாய்ப்பு. அந்நேரத்தில் அங்கே வந்த ஒரு செல்வந்தன் மிகவும் காயப்பட்டிருந்த ஒரு அடிமையை அதிகமான விலை கொடுத்து வாங்கி அவனை அவ்விடத்தை விட்டு வெளியே கொண்டு வந்து, நீ உன் வழியே போ, நான் என் வழியே போகிறேன் என்றான்.

திடுக்குற்ற அவ்வடிமை, என்னை விலை கொடுத்து வாங்கிய உமக்கே நான் சொந்தம் என்று சொல்லி அச் செல்வந்தன் பாதத்திலே தன்னைத் தானாகவே விரும்பி அர்ப்பணித்தான்.

பாவம் எமது வாழ்வை அடிமை கொண்டிருந்தது. எமது ஆத்துமாக்கள் காயமடைந்து குற்றுயிராய் தவித்துக்கொண்டிருந்தது. எம்மை யார் மீட்டுக்கொள்வார்களோ என்று நாம் அங்கலாய்த்த வேளையில், எம்மை தேடி வந்து எமது பாவங்களுக்காக விலையேறப்பெற்ற தமது தூய இரத்தத்தை உன்னதமான கிரயமாக செலுத்தி எம்மை மீட்டுக்கொண்டார்.

ஆண்டவராகிய இயேசு அவர் எமக்கு தந்த மீண்பின் தன்மையை உணர்ந்திருக்கிறோமோ? எமது பாவங்களுக்காய் நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை, தாமே சிலுவையில் அனுபவித்து, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த ஆண்டவருக்கு எமது வாழ்வை அர்ப்பணிப்பதில் என்ன தாமதம்?

ஆண்டவர் எம்மை அடிமைகொள்கிறவர் அல்ல; நாமே விரும்பி எம் வாழ்வை அவர் பாதத்தில் அர்ப்பணிப்பதே பவுல் ரோமரில் குறிப்பிடும் ‘பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதால்” என்பதின் கருத்தாகும். பாரிசுத்தாவியினால் உருவாகும் கருவை கர்ப்பத்திலே சுமக்கும் படிக்கு கன்னிமரியாளுக்கு தேவனால் அழைப்பு வந்த போது ‘இதோ ஆண்டவரின் அடிமை” என்று ஒப்புக்கொடுத்தார் அல்லவா அதுவே உண்மையான ஒப்புக்கொடுத்தலாகும்.

நாமும் இன்னமும் அடிமைகளா? அல்லது மீட்கப்பட்ட அடிமைகளா? நாம் யாருக்கு இன்னமும் அடிமைகளாய் இருக்கிறோம். பாவத்திற்கா? அல்லது பாவத்தினின்று விடுதலையாக்கின ஆண்டவருக்கா? சற்றே நம்மை ஆராய்ந்து பார்த்து நமது வாழ்வை சீர்படுத்துவோம்...

முழு வேதாகமத்தின் சாராம்சமே இரட்சிப்பு!


முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து அவனைக் காப்பாற்றும் தேவனுடைய உன்னத கிரியையே இரட்சிப்பு.

• இது முற்றும் முழுவதுமாக கர்த்தருடையதாகும். (யோனா 2:9)

• இரட்சிப்பை மனிதன் எவ்விதமான கிரியைகளைச் செய்தும் பெறமுடியாது. (ரோம 3:20, 4:16, எபே 2:8-10)

• இரட்சிப்பு என்ற சொல் வெறும் பாவமன்னிப்பை மட்டும் கூறாமல், நீதிமானாகுதல், மறுபிறப்படைதல், வரப்போகும் உயிர்த்தெழுதல், மகிமையடைதல் போன்ற காரியங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான காரியமாகும்.

• பாவமாகிய குற்ற உணர்விலிருந்தும் தினந்தோறும் தினந்தோறும் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுதலையடைந்து பரிசுத்தமடைதலும் பாவத்தின் சமூகத்திலிருந்து மீட்கப்பட்டு மகிமையடைதலையும் இரட்சிப்பு தன்னகத்தே கொண்டுள்ளது.

• இரட்சிப்பைக் கொடுப்பதற்காகவே தேவன் பூலோகத்திற்கு வந்து பாடுபட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். - (மத்தேயு 20: 26,27).

மிகச்சிறந்த படிப்பாளரான Booker T. Washington என்பவர் Hampton Institute in Virginia என்னும் இன்ஸ்டியூட்டியில் சேருவதற்காக இன்டர்வியூவிற்காக சென்றிருந்தார். அந்த இன்ஸ்டிடியூட் மிகவும் பெயர் பெற்றதாகும். அதில் இடம் கிடைப்பது மிகவும் அரிது, அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை அங்கிருந்த வகுப்பறையை கழுவ சொல்லிவிட்டு, அங்கிருந்த பெஞ்சுகளையும் துடைக்க சொல்லி விட்டு போனார்கள். அவர் பாடம் சம்பந்தமான கேள்வியை கேட்பார்கள் என நினைத்தால் இந்த வேலையை சொல்லுகிறார்களே என்று அவருக்கு கோபமிருந்தாலும் வேறுவழியில்லாமல், அதை துடைக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தலைமை ஆசிரியை எல்லாவற்றையும் தனது கைக்குட்டையால் துடைத்து பார்த்து, ‘சிறப்பான காரியத்தை செய்தாய்’ என்று அவரை பாராட்டி அவருக்கு அங்கு ஒரு இடத்தை கொடுத்தார்களாம். அது தன் வாழ்க்கையையே மாற்றிற்று என அவர் தனது புத்தகத்தில் எழுதினார்.

அன்று ஒரு நாள் மேல் வீட்டறையில், இயேசுகிறிஸ்து தன் வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினபோது அதை பார்த்து கொண்டிருந்த சீஷர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! அவர்கள் அவரை ராஜாவாக, தங்கள் குருவாக, ஆண்டவராக, போதகராக ஏற்றிருந்தபோது அவரே தங்களது கால்களை கழுவுகிறரரே என்று நெருடல் அடைந்திருந்தாலும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர்கள் எதிர்பாராத காரியத்தை கிறிஸ்து செய்து கொண்டிருந்தார். அவர்கள் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள். கடைசியில் பேதுரு மாத்திரம் துணிவுடன், ‘ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா’ என்று கேட்டபோது, இயேசுகிறிஸ்து ‘ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்’. (யோவான் 13:4-15) என விளக்கினார்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிற நமக்குள் தாழ்மை இருக்கிறதா? நாம் தேவனாக வணங்குகிற இயேசுகிறிஸ்துவே கால்களை கழுவினதுண்டானதால், நாம் எவ்வளவு தாழ்மையாய் இருக்க வேண்டும்? அவருடைய மாதிரியை பின்பற்றுகிறோமா? 

மற்றவர்களுடைய கால்களை கழுவாவிட்டாலும், மற்றவர்களை உதாசீனமாக எண்ணுவதாவது குறைந்திருக்கிறதா? இன்று அந்த தாழ்மைக்கும் நமக்கும் எவ்வளவு தூரமாகி விட்டது! கொஞ்சம் கையில் பணம் கிடைத்து விட்டால், மற்றவர்களை துச்சமாக எண்ணுகிற மனம், (ஏதோ அந்த பணம் என்றென்றும் நிலைத்திருக்கிறமாதிரி) வேலையில் சற்று உயர்த்தப்படடால், மற்றவர்கள் எனக்கு கீழ் என்கிற மாதிரியான நடவடிக்கைகள், அது வேலையிடத்தில் மாத்திரம் அல்ல, சக விசுவாசிகளிடமும் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? கிறிஸ்துவின் போதகத்திற்கு மாறாக நடக்கிறதல்லவா?

ஊழியத்திலும் நான்தான் பெரியவன், உனக்கு அந்த தாலந்து இல்லை, ஆகவே நான் உன்னைவிட பெரியவன் என்று மற்றவர்களை மட்டமாக எண்ணும் நினைவுகள், அவன் என்ன சின்ன ஊழியக்காரன் நான் பெரியவன், எனக்கு இருக்கிற அந்தஸ்து என்ன, புகழ் என்ன என்கிற பெருமையான எண்ணங்கள், மட்டுமல்ல, அதற்கேற்ப நடவடிக்கைகள்! அவை கர்த்தருடைய சீஷன் என்பதை விட பரலோகத்திலிருந்து பெருமையினிமித்தம் கீழே தள்ளப்படட லூசிபரின் எண்ணங்கள் அல்லவா நிறைந்து காணப்படுகிறது!

ஒருமுறை சாது சுந்தர் சிங் இங்கிலாந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சகோதரி, ‘உமக்கென்ன, நீர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின், உமக்கு என்ன வரவேற்பு, என்ன புகழ்!’ என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அவர் சொன்னார், ‘இயேசுகிறிஸ்து ஏறி சென்ற கழுதையாகவே நான் என்னை நினைக்கிறேன். அன்று கிறிஸ்துவை சுமந்த கழுதை, தனக்குதான் மக்கள் வரவேற்பளிக்கிறார்கள். தனக்குதான் மகிமை செலுத்துகிறார்கள் என்று நினைத்திருந்தால் அது எத்தனை முட்டாள்தனமோ அதுப் போலத்தான், இப்போது கிடைக்கிற புகழ் எல்லாம் எனக்குத்தான் என்று நான் நினைத்தால் நானும் ஒரு முட்டாளாகத்தான் இருப்பேன். கிறிஸ்துவை நான் சுமப்பதால்தான் எனக்கு இந்த புகழ் எல்லாம், கிறிஸ்து எனக்குள் இல்லாவிட்டால், நான் வெறும் கழுதைதான்’ என்று கூறினாராம்! என்ன ஒரு தாழ்மை பாருங்கள்! அப்படிப்பட்ட
தாழ்மையுள்ள பாத்திரங்களையே கர்த்தர் இந்நாளில் தேடுகிறார், பணம், பதவி பொருள், வந்தாலும் மாறிப்போகாத, அகந்தை கொள்ளாத இருதயத்தையே தேவன் தேடுகிறார். 

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது (யாக்கோபு 4:6).

பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிற தேவன், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கு எத்தனை கிருபைகளை கொடுக்கிறார் பாருங்கள்! அழிவுக்கு முன்னானது அகந்தை என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நமது குலத்தை பற்றியோ, நமது அந்தஸ்தை பற்றியோ, நமது ஊழியங்களை குறித்தோ நாம் பெருமை கொள்ளக்கூடாது, எல்லாமே கர்த்தர் கொடுத்தது. அவர் நமக்கு கொடுக்க கொடுக்க, நாம் இன்னும் நம்மை தாழ்த்தும்போது, இன்னும் அதிகமாய் அவர் நமக்கு கொடுக்கிறார், உயர்த்துகிறார். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட கிருபைகளில், நம்மையே உயர்த்தும்போது கர்த்தர் நம்மை விட்டு அகன்று போகிறார். ஆனால் அதை அறியாமல் நாம் இன்னும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாதுள; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் என்ற கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.


ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்ற தரிசனம்.

'உலகமெங்கும் போய் சுவிஷேசத்தை அறிவியுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் பரமேறிச் சென்ற நமதாண்டவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒருவருக்காவது சுவிஷேசத்தை அறிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இக் கடைசி காலத்தில் வாழ்கின்ற நாம் நமது நேரத்தை ஆண்டவருக்கென்று செலவழிப்போமா?

'தேவன் அன்பாகவே இருக்கிறார்", 'கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்" என்று கிறிஸ்துவை அறியாதோருக்கு தெரிவித்து அவரிடத்தில் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை பகிர்ந்துகொள்வோமா?

எத்தனையோ மிஷனரிகள் தங்கள் உயிரையும் பாராது ஆதிவாசிகளுக்கு இயேசுவைப் பற்றி தெரியாத மக்களுக்கு, மலை, காடு, பனி, வெயில், மழை எனப் பாராது ஆண்டவராகிய இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவித்து இரத்தச் சாட்சிகளாகவும் மரிக்க அஞ்சாது சுவிஷேசத்தைச் சுமந்து சென்றனரே. நாமும் அவர்களைப்போல காடு மலை என்றெல்லாம் சென்று சுவிஷேசத்தை அறிவிக்காவிட்டாலும்கூட நாம் இருக்கும் இடத்திலே, சபையில், அல்லது நமது வீட்டண்டையில் வசிக்கின்றவர்கள் மத்தியில் அல்லது நமது சமுதாயத்தில் இப்பணியை நிறைவேற்றலாமே. இதுதான் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்ற தரிசனம். இதை நிறைவேற்ற இன்றே முயற்சிப்போமா?

-.வஷ்னீ